ரஷ்யாவை விட்டு தற்காலிகமாக வெளியேறுகிறது டிக் டாக்
ரஷ்யாவில் தற்காலிகமாக நேரலை ஒளிபரப்பு உள்ளிட்ட சேவைகளை நிறுத்துவதாக டிக் டாக் தெரிவித்துள்ளது.
ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக போலி தகவல்களை வெளியிடுவோருக்கு 15 ஆண்டுகள் உள்ளிட்ட சிறை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிபர் புதின் அறிவித்ததை அடுத்து பணியாளர்கள் பாதுகாப்பு கருதி நேரலை ஒளிபரப்பு மற்றும் புதிதாக வீடியோக்கள் பதிவிடுவதை தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதாக டிக் டாக் நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
அதேநேரம் செய்தி பகிர்வு தடை செய்யப்படாது என்றும் சேவைகள் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதும் முழு வீச்சில் மீண்டும் இயங்கத் துவங்கும் என டிக் டாக் தெரிவித்துள்ளது.
Comments