ரஷ்ய பெரு முதலீட்டாளர்கள் மீது பொருளாதார தடைகள்.!
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை நிறுத்த அடுத்தகட்டமாக ரஷ்ய பெரு முதலீட்டாளர்கள் மீது பொருளாதர தடைகள் விதிக்கவும் அவர்களின் சொத்துக்களை முடக்கவும் ஜி7 நாடுகள் முடிவு எடுத்துள்ளதாக ஜெர்மனி தெரிவித்துள்ளது.
அணு மின் நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து ரஷ்யா மீது ஜி7 நாடுகள் கூட்டமைப்பு கடந்த வெள்ளிக்கிழமை கடும் பொருளாதார தடைகளை அறிவித்தது.
இந்நிலையில் அதிபர் புதின் மூலம் ஆதாயம் பெற்று பெரும் முதலீட்டாளர்களாக மாறிய ரஷ்யர்கள் மீது கடும் பொருளாதார நடவடிக்கை எடுக்கவும், அவர்களின் சொத்துக்களை முடக்கவும் ஜி7 நாடுகள் மாநாட்டில் முடிவெடுக்க உள்ளதாக ஜெர்மனி தெரிவித்துள்ளது.
Comments