72 ஏக்கர் பரப்பளவில் ராம்கோ சுற்றுச்சூழல் பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே 72 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள ராம்கோ சுற்றுச்சூழல் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பந்தல்குடியில் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தால் 5 கோடியே 20 லட்ச ரூபாய் செலவில் செயல்படாத சுரங்கப் பகுதிகளை சீரமைத்து அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பூங்கா திறந்து வைக்கப்பட்டது.
இந்த பூங்காவில் வேம்பு, புங்கம், அத்தி, நாவல், வில்வம், வாகை, நித்திய கல்யாணி போன்ற சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மரங்கன்றுகள் மற்றும் புதர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
இப்பூங்காவை பார்வையிடும் மாணவர்கள் உள்ளிட்டோர் தாவரங்களின் தன்மைகள், நாட்டு மரங்களின் பெருமைகள், பாறைகள் உள்ளிட்டவை குறித்து அறிந்து கொள்ளலாம்.
Comments