இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, இந்தியா 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

0 5313

பஞ்சாபில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மொகாலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்திருந்தது.

இந்திய அணி சார்பில் ஆல்ரவுண்டர் ஜடேஜா, 175 ரன்கள் குவித்திருந்தார். அடுத்து களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 174 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதையடுத்து 400 ரன்கள் பின் தங்கியிருந்த நிலையில் ஃபாலோ ஆன் ஆகி 2-வது இன்னிங்சை தொடர்ந்த அந்த அணி 178 ரன்களிலேயே சுருண்டது. 

2 இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments