ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 26ம் தேதி முதல் தொடக்கம்

0 5841
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 26ம் தேதி முதல் தொடக்கம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 26ம் தேதி முதல் தொடங்க உள்ளது. மும்பையில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளன.

அன்று நடைபெறும் மற்றொரு போட்டியில், ஐ.பி.எல்-லில் புதிதாகப் பங்கேற்கும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் குஜராத் டைடன்ஸ் அணிகள் மோத உள்ளன. மும்பை மற்றும் புனேவில் உள்ள 4 அரங்கங்களில், 70 லீக் போட்டிகளும் நடைபெற உள்ளன.

மே 29ம் தேதி நடைபெறும் இறுதி போட்டி மற்றும் பிளே-ஆப் சுற்று போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் பின்னர் முடிவு செய்யப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments