ஆசிரியர்கள் மீது காவல்நிலையத்திற்கு தனியாக வந்து புகார் அளித்த சிறுவன்
தெலுங்கானாவில், மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் தன்னை ஆசிரியர்கள் அடிப்பதாகக் கூறி காவல்நிலையத்திற்கு சென்று புகாரளித்துள்ளான்.
பையாரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் அனில் என்ற அந்த சிறுவன், பள்ளிக்கு அருகேயுள்ள காவல்நிலையத்திற்கு தனியாக சென்றுள்ளான்.
சிறுவனை பார்த்த போலீசார் காவல்நிலையத்திற்கு வந்ததற்கான காரணம் குறித்து விசாரித்த போது, தன்னுடைய ஆசிரியர்களான சன்னி, வெங்கட் ஆகியோர் தன்னை அடிப்பதாக தெரிவித்துள்ளான்.
சிறுவனின் புகார்களை கேட்டுக் கொண்ட போலீசார், அவனை கையோடு பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சிறுவன் தன்னை அடித்த இரண்டு ஆசிரியர்களை அடையாளம் காட்டியதை அடுத்து, போலீசார் ஆசிரியர்களுக்கு அறிவுரை கூறியதுடன் சிறுவனுக்கும் அறிவுரை கூறிவிட்டுச் சென்றனர்.
Comments