உக்ரைனில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை குறி வைத்தே ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது ; இங்கிலாந்து
உக்ரைனில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை குறி வைத்தே ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதாக கூறியுள்ள இங்கிலாந்து, செச்செனியா, சிரியாவில் கையாண்ட போர் தந்திரங்களை உக்ரைனிலும் ரஷ்யா கையாள்வதாக தெரிவித்துள்ளது.
குண்டு வெடிப்பு மற்றும் கனரக பீரங்கிகள், ஏவுகணை தாக்குதலால் உக்ரைனில் ஏராளமானோர் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா. கூறியிருந்த நிலையில், மக்கள் அதிகம் வசிக்கும் கிவ், செர்னிகிவ், கார்கீவ் போன்ற நகரங்களை தான் ரஷ்யா குறிவைத்து தாக்குகிறது என இங்கிலாந்து உளவுத்துறை தெரிவித்துள்ளது.
எதிர்தரப்பு படைகளின் மன உறுதியை உடைக்கும் வகையில் இந்த தந்திரங்களை ரஷ்யா கையாள்கிறது என இங்கிலாந்து உளவுத்துறை தெரிவித்துள்ளது. மக்கள் வசிக்கும் பகுதிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக இங்கிலாந்து கூறும் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.
சுற்றுப்புறத்தில் இருந்து ஆக்சிஜனை உறிஞ்சி அதிக வெப்பநிலையுடன் வெடிக்கும், மனித உடல்களை ஆவியாக்கும் மோசமான தன்மை கொண்ட வேக்யூம் வெடிகுண்டு எனப்படும் தெர்மோபரிக் ஆயுதத்தை செச்செனியா, சிரியாவில் ரஷ்யா பயன்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments