பஞ்சாப்பில் 4 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட பாதுகாப்பு படை வீரர்

0 2639

பஞ்சாப்பில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் தனது சக பாதுகாப்பு படைவீரர்கள் 4 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அமிர்தசரஸின் ஹாசா கிராமத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மஹாராஷ்டிராவைச் சேர்ந்த Sattepa என்ற எல்லை பாதுகாப்பு படை வீரர், திடீரென தனது சக பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.

காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். சக வீரர்களை சுட்டதோடு, தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். 

தொடர் பணிச் சுமை காரணமாக அந்த வீரர் இவ்வாறு நடந்துக் கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments