திருப்பூரில் நகை அடகுக் கடையில் 375 சவரன் நகைகள் திருடிச் சென்ற வடமாநில கொள்ளையர்கள் 4 பேரை நாக்பூரில் வைத்து கைது செய்த தனிப்படை போலீசார்.!
திருப்பூரில் நகை அடகுக் கடைக்குள் புகுந்து 375 சவரன் நகைகள், வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்ற வடமாநில முகமூடி கொள்ளையர்கள் 4 பேரை நாக்பூரில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான நகை அடகுக் கடைக்கு, கடந்த 3-ந் தேதி இரவு முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள், கோடிக்கணக்கான நகை, மற்றும் வெள்ளிப்பொருட்கள், ரொக்கப் பணத்தை திருடிச் சென்றனர்.
நகைக்கடை மற்றும் அருகில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது 4 பேரின் உருவம் பதிவாகியிருந்தது. இதனிடையே, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவிலும் அதே 4 பேரின் உருவம் பதிவாகியிருந்தது.
இந்த 4 பேரும் நகை அடகுக்கடையில் திருடிய நகைகளை மூட்டையாகக் கட்டி எடுத்துக் கொண்டு சென்னையில் இருந்து மகாராஷ்டிரா செல்லும் ரயிலில் தப்பிச் சென்றதை கண்டுபிடித்த தனிப்படை போலீசார், அங்கு சென்று நாக்பூரில் வைத்து கைது செய்தனர். கொள்ளையர்களிடம் இருந்து 2கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ தங்கம் 28 கிலோ வெள்ளி 14 லட்சம் ரொக்கம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Comments