உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, அப்போலோ மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி.!
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, அப்போலோ மருத்துவமனை சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதில் 100க்கும் மேற்பட்ட பெண்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க் பயிலும் மாணவர்கள் பங்கேற்று நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் தொடங்கி, சபி முகமது சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வரை பேரணியாக சென்றனர்.
பெண்கள் உடல் நலம் மற்றும் உடற்பயிற்சி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் உடற்பயிற்சியின் நன்மைகளையும் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் விதமாகவும் இந்த பேரணி நடைபெற்றது.
Comments