டிக்கெட் படத்துக்கா....ஸ்நாக்ஸ்கா.... கன்ஃபியூஸ் ஆகிய தியேட்டர் மேலாளர் ''வலிமை'' காட்டிய ரசிகர்
நடிகர் அஜித்குமாரின் வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் டே ஷோவுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததாக கொடுத்த புகாரில் வசூலித்த பணத்தை திருப்பித் தர போலீசார் உத்தரவிட்டனர். திண்பண்டங்களுக்காக கூடுதல் தொகை ஆன்லைன் செயலி மூலம் வசூலித்ததாக திரையரங்கு மேலாளர் உளறிக் கொட்டிய சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு...
சென்னை பெரம்பூரை சேர்ந்த தேவராஜன் என்பவர் கடந்த மாதம் 20-ஆம் தேதி ரோகினி திரையங்கில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த வலிமை படத்திற்கு புக்மை ஷோ செயலி மூலம் 395 ரூபாய் வழங்கி டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார்.
முன்பதிவு செய்த டிக்கெட்டில் 164 ரூபாய் கூடுதல் வசூலிக்கப்பட்டது குறித்து அறிந்த தேவராஜன் சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மற்றும் பதிவுத் தாபல் மூலம் புகாரளித்துள்ளார். கோயம்பேடு சி.எம்.பி.டி. காவல் நிலையத்திற்கு புகார் மாற்றப்பட்ட நிலையில், தேவராஜனை அழைத்து போலீசார் விசாரித்து உள்ளனர்.
தொடர்ந்து ரோகினி திரையரங்க மேலாளர் ராமலிங்கத்தை அழைத்து கூடுதல் டிக்கெட் வசூலித்தது தொடர்பாக விசாரித்து உள்ளனர். விசாரணையில் கூடுதல் டிக்கெட் வசூலித்தது குறித்து ராமலிங்கம் ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
முதல் நாள் காட்சியில் கூடுதல் கட்டணத்துடன் டிக்கெட் வழங்கப்பட்ட அனைவரும் பாக்கித் தொகையை திருப்பி செலுத்த போலீசார் தெரிவித்துள்ளனர். கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்பட்ட 164 ரூபாய் தன் வங்கிக் கணக்கிற்கு திரும்பி வந்ததாக தேவராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விளக்கமளித்த ரோகிணி திரையரங்க மேலாளர் ராமலிங்கம், புக் மை ஷோ செயலியில் இணையதளம் மூலம் அனைத்து முன்பதிவு டிக்கெட்டுகள் பதிவு செய்யப்படுவதாகவும், அதில் தின்பண்டங்களை வாங்குவதற்காக கூடுதலாக 164 ரூபாய் பெறப்பட்டதாகவும் கூறினார்.
மேலும், ஒரு காட்சிக்கு 500 பேர் திரைப்படத்தை கண்டதாகவும், அவர்கள் அனைவருக்கும் முறையாக பணம் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் கூறினார்.
Comments