மீன் வரத்து குறைவு - கருவாடுக்கு கடும் கிராக்கி - விலை உயர்வு
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் ஆழ்படுத்தும் பணி காரணமாக விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாததது மற்றும் உற்பத்தி குறைவு காரணமாக கருவாடு விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
துறைமுகத்தை ஆழ்படுத்தும் பணி காரணமாக கடந்த ஒரு மாதமாக விசைப்படகுகள் கடலுக்கு செல்ல முடியாமல் நங்கூரமிட்டு நிற்கின்றன. இதனால் மீன்கள் மற்றும் கருவாடு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சாதாரண நாட்களில் விற்கப்படும் சீலா, ஊளி, நெத்திலி உள்ளிட்ட கருவாடுகள் கிலோவுக்கு 100 முதல் இருநூறு ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments