சவுதி அரேபியாவில் முழு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கட்டாய தனிமையிலிருந்து விலக்கு
சவுதி அரேபியாவில் முழு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை வாபஸ் பெறுவதாக அரசு அறிவித்துள்ளது.
மசூதி உள்ளிட்ட பொது இடங்களில் தனி மனித இடைவெளிக்கு விலக்கு, பொது வெளியில் முக கவசம் அணிய அவசியமில்லை, மூடிய அரங்குகளில் மட்டும் கட்டாயம் முக கவசம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
மெக்கா, மெடினா வரும் சுற்றுலா பயணிகள் இனி ஆர்.டி.பி.சி.ஆர். சோதனைச் சான்று வழங்க அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Comments