இந்தியத் தூதரகம் அழைப்புவிடுக்கும் வரை உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் - மத்திய வெளியுறவு அமைச்சகம்

0 2371

இந்தியத் தூதரகம் அழைப்புவிடுக்கும் வரை உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது.

சுமி நகரில் சுமார் 700 மாணவர்கள் சிக்கியுள்ளனர். வாகன வசதி கிடைக்காத அவர்கள் நடந்தே நாட்டின் எல்லை வரை செல்ல முடிவெடுத்து ஒரு குழுவாக புறப்பட்டனர்.

இது தொடர்பாக படங்கள் வெளியான நிலையில் குண்டுகள் பொழியும் சூழலில் மாணவர்கள் உயிரைப் பணயம் வைக்க வேண்டாம் என்றும் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லுமாறும் இந்திய தூதரகம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களுடன் தூதரகங்கள் மூலம் தொடர்பு கொண்டு வருவதாகவும் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் வரை வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் வெளியுறவுச்செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ச்சி விடுத்த அறிக்கையில் அறிவுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments