கனவிலும் நினைத்துப் பார்க்காத அளவிற்கு ரஷ்யாவுக்கு பதிலடி - ஸெலன்ஸ்கி

0 5586

தங்கள் நாட்டுடனான போரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், கொல்லப்பட்டவர்கள் 18 முதல் 20 வயதுடையவர்கள் என்றும், ரஷ்யா ஏன் அவர்களைப் போருக்கு அனுப்பியது என்று தெரியாமல் உயிரை இழந்தவர்கள் எனவும் தெரிவித்தார்.

எதிரிகளுக்கு கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இழப்புகளை ஏற்படுத்தி உள்ளதாகவும் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். போருக்குப் பிந்தைய புனரமைப்பு முயற்சிகள் குறித்து தாம் ஏற்கனவே கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாகவும் உக்ரைன் அதிபர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments