ரஷ்ய நாட்டு விமானங்கள் பறக்க ஐரோப்பிய ஒன்றியம் தடை விதிக்கப்பட்டுள்ளதால் திரும்ப முடியாமல் தவிக்கும் ரஷ்யர்கள்

0 1923
ரஷ்ய நாட்டு விமானங்கள் பறக்க ஐரோப்பிய ஒன்றியம் தடை விதிக்கப்பட்டுள்ளதால் திரும்ப முடியாமல் தவிக்கும் ரஷ்யர்கள்

ரஷ்ய விமானங்கள் பறக்க ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளதால், பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா சென்ற ரஷ்யர்களால் தாயகம் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை கண்டித்து, 27 நாடுகளின் வான்வழிப் பாதையை ரஷ்ய விமானங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. பல்கேரியாவின் பிரின் மலைப்பகுதியில் உள்ள ரிசார்ட்டுகளில் பனிச்சறுக்கு செய்து பொழுது போக்கும் ரஷ்யர்களால் மீண்டும் ரஷ்யாவிற்கு செல்ல முடியாமல் உள்ளனர்.

இவர்களை போலவே கரீபியத் தீவுகளில் 10,000 ரஷ்யர்களும், கியூபாவில் 8,000 ரஷ்யர்களும் சிக்கியுள்ளனர். ரஷ்ய நாட்டு வங்கிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், கிரெடிட் கார்டுகளையும் பயன்படுத்த முடியாமல் அவர்கள் அவதிக்குள்ளாகினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments