கொலை முயற்சிகளில் உயிர் தப்பிய உக்ரைன் அதிபர்..!

0 2513
கொலை முயற்சிகளில் உயிர் தப்பிய உக்ரைன் அதிபர்..!

உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியைக் கொல்வதற்காக ரஷ்யா இரண்டு குழுக்களை அனுப்பி வைத்ததாகவும், அந்தக் கொலை முயற்சிகளை முறியடித்ததாகவும் உக்ரைன் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 24ஆம் நாள் உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலைத் தொடங்கியது. கீவ் நகரின் மீது வான்வழியாகவும், தரைவழியாகவும் ரஷ்ய ராணுவம் தாக்குதலை நடத்தியபோது, நாட்டை விட்டுப் பாதுகாப்பாக வெளியேற்றுவதாக அமெரிக்கா கூறியபோதும் அதை ஏற்க மறுத்துவிட்டார். அவர் ரஷ்யாவில்ல கொலைக் குழுவின் தாக்குதல் முயற்சிகளுக்கு இலக்காகியுள்ளதாகக் கூறப்படுகிறது.அதனால் செலன்ஸ்கி பதுங்கு குழிகளில் இருந்துகொண்டு தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. .

 ரஷ்ய உளவுத்துறையில் உள்ள போருக்கு எதிரான குழுவினர் தகவல் அளித்தது செலன்ஸ்கி மீதான தாக்குதல் முயற்சிகளை முறியடிக்க உதவியாக இருந்ததாக உக்ரைன் தேசியப் பாதுகாப்புக் கவுன்சில் செயலர் அலெக்சி டேனிலோவ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 நாட்டின் தலைமையை அழிப்பதன்மூலம் அரசியல் முறையில் உக்ரைனை அழிக்க ரஷ்யா முயல்வதாகவும், அவர்களின் முதல் குறி தான்தான் என்றும் செலன்ஸ்கி கடந்த வாரம் குற்றஞ்சாட்டியிருந்தார்.

உக்ரைனியர்களைக் கொல்வது அல்லது சிறைபிடிப்பதற்கான பட்டியலை ரஷ்யப் படையினர் தயாரித்துள்ளதாகக் கடந்த மாதம் அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.

உக்ரைன் அதிபரைக் கொல்லும் திட்டத்துக்குப் புடினின் நண்பர் நடத்தி வரும் வாக்னர் குழுமத்தைச் சேர்ந்த ஒரு குழுவும், செச்சன்யாவில் ரஷ்யாவுக்குப் போர் புரிந்த ஒரு குழுவும் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

செச்சன் குழுவினரின் கொலை முயற்சி முறியடிக்கப்பட்டு அவர்கள் உக்ரைன் படையினரால் கொல்லப்பட்டதாக டேனிலோவ் தெரிவித்துள்ளார். கொல்லப்பட்டோரில் ரஷ்யாவின் செச்சன்ய தளபதி மகமது துசாயேவும் ஒருவர் என்றும் டேனிலோவ் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments