குடும்பப் பிரச்சனை காரணமாக கோவில் தெப்பக்குளத்தில் தாயும் மகளும் குதித்து தற்கொலை செய்துகொண்ட சிசிடிவி காட்சிகள்.!

0 2861

விருதுநகரில் குடும்பப் பிரச்சனை காரணமாக கோவில் தெப்பக்குளத்தில் தாயும் மகளும் குதித்து தற்கொலை செய்துகொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

விருதுநகரைச் சேர்ந்த பழனிவேல் - மகாலட்சுமி தம்பதி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த 2 நாட்களாக கோவிலுக்குச் செல்வதில் இருவருக்கும் சண்டை எழுந்ததாகவும் அதன் தொடர்ச்சியாக பழனிவேல் மகாலட்சுமியை அடித்தார் என்றும் கூறப்படுகிறது.

இதனையடுத்து வியாழக்கிழமை நள்ளிரவு தனது 9 வயது மகள் கஜலட்சுமியை அருகிலுள்ள தெப்பக்குளத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார் மகாலட்சுமி. பின்னர் தாயும் மகளும் குளத்தின் சுற்றுச்சுவர் மீது ஏறி, உயரமான கம்பி வேலியைத் தாண்டி குளத்துக்குள் குதித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை மாலை இருவரது உடல்களும் குளத்தில் மிதப்பதைப் பார்த்து, பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் வந்த போலீசார், சடலங்களை மீடு விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments