முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு நடத்தப்படுமென அறிவிப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், வரும் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை சென்னையில் மாநாடு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில வளர்ச்சித் திட்டங்களின் செயல்பாட்டை ஆட்சியர்கள் மூலம் அறிந்து கொள்ளவும், அதனை மேலும் சிறப்பாக செயல்படுத்துவது குறித்து அறிவுரைகள் வழங்கவும் மாநாடு நடத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments