கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உட்பட 10 பேர் குற்றவாளிகள்
சேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவரான கோகுல்ராஜ், கடந்த 2015ஆம் ஆண்டு நாமக்கல் அருகே ரயில் தண்டவாள பகுதியொன்றில் இருந்து இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் சங்ககிரியைச் சேர்ந்த யுவராஜ் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
வழக்கு சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டு, முதலில் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்திலும் பின்னர் மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்குகான சிறப்பு நீதிமன்றத்திலும் விசாரிக்கப்பட்டு வந்தது.
2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணையின் முடிவில் யுவராஜ் உட்பட 10 பேர் குற்றவாளிகள் என நீதிபதி சம்பத்குமார் தீர்ப்பளித்தார். தண்டனை விவரம் மார்ச் 8ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி அறிவித்தார்.
விசாரணையின்போதே 2 பேர் இறந்துவிட்ட நிலையில், சங்கர், அருள்செந்தில், செல்வகுமார், தங்கதுரை, சுரேஷ் ஆகிய 5 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
Comments