விருத்தாச்சலம் விருதகிரீஸ்வரர் கோவிலில் திருடுபோன மூன்று கோபுர கலசங்கள் கண்டுபிடிப்பு

0 4814

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில் திருடப்பட்ட கோவில் கலசங்கள் மீட்கப்பட்டுள்ளன.

விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேகம்நடந்து ஒரு மாதம் கூட முடிவடையாத நிலையில் கோவிலிலிருந்து தங்கமுலாம் பூசப்பட்ட மூன்று கோபுரக்கலசங்கள் திருடப்பட்டன. இதுகுறித்து தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில், சம்பவத்தன்று அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். 

இதில் பெரியார் நகர், அமுதம் தெருவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கோபுர கலசங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய சந்தோஷ்குமார் என்பவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments