ரூ 50 லட்சம் முக்கியமில்ல விஸ்வாசம் தான் முக்கியம்..! உப்பு போட்டு சாப்பிடும் கவுன்சிலர்..! இப்படியும் சில தன்மான சிங்கங்கள்

0 5570

திசையன்விளை பேரூராட்சியில்  குலுக்கல்முறையில் அதிமுக, பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்றி உள்ள நிலையில் ஒரு ஓட்டுக்காக  50 லட்சம் ரூபாய் பணமும், துணை தலைவர் பதவியும் தருவதாக ஆசைக்காட்டியும் அசைந்து கொடுக்காத அதிமுக பெண் கவுன்சிலரின் நேர்மை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

நெல்லை மாவட்டம் திசையன் விளை பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 இடங்களில் அதிமுக 9 இடங்களை வென்ற நிலையில் திமுக 2 காங்கிரஸ் 2 பாஜக, தேமுதிக தலா ஒரு இடத்திலும் சுயேட்சைகள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றிருந்தனர்.

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியை ராஜினாமா செய்து விட்டு 6 வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற கமலா நேரு உள்ளிட்ட 2 சுயேட்சைகள் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்த நிலையில் பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுக தலைமை சுபீனா என்பவரின் பெயரை அறிவித்த நிலையில், அவரது வேட்பு மனுவை முன் பொழியக்கூட ஒருவரும் இல்லாததால் அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதே நேரத்தில் திமுகவில் புதிதாக சேர்ந்த கமலா நேருவை பேரூராட்சி தலைவராக்க உள்ளூர் திமுக நிர்வாகிகள் களமிறக்கினர்.

தேர்தலின் முடிவில் அதிமுக , திமுக ஆகிய இரு கட்சிகளும் தலா 9 வாக்குகளை பெற்று சம நிலையில் காணப்பட்டது. இதையடுத்து குலுக்கல்முறையில் அதிமுக வை சேர்ந்த ஜான்ஸி ராணி பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திமுகவில் புதிதாக சேர்ந்த கமலா நேருவை பேரூராட்சி தலைவராக்குவதற்காக பா,ஜ,க, தேமுதிக , சுயேட்சை உள்ளிட்டவர்களை எல்லாம் வளைத்த உள்ளூர் திமுக நிர்வாகிகளால், 50 லட்சம் ரூபாயும், துணை தலைவர் பதவியும் தருவதாக ஆசைக்காட்டியும் 9வது வார்டு அதிமுக கவுன்சிலரான உமா என்பவரை வளைக்க இயலவில்லை என்று கூறி பேரம் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது

இது தொடர்பாக அதிமுக கவுன்சிலர் உமாவிடம் பேரம் பேசிய குற்றச்சாட்டுக்குள்ளான மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷை தொடர்பு கொண்ட போது, தான் பேசியது உண்மைதான் என்று ஒப்புக் கொண்ட அவர், தான் பேசிய ஆடியோ முழுமையாக இல்லாமல் எடிட் செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments