வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 159 சவரன் நகை, ரூ.15 லட்சம் கொள்ளை

0 2267
வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 159 சவரன் நகை, ரூ.15 லட்சம் கொள்ளை

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 159 சவரன் நகை, 15 லட்சம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மாந்துரை கிராமத்தை சேர்ந்த பண்ணையாரான ஏகாம்பரம் பிள்ளை, கடந்த 2017ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில், அவரது மனைவி கமலம் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில், திருச்சி அண்ணா நகரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்ற கமலம் இன்று வீடு திரும்பிய போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 159 சவரன் தங்க நகைகள், 20 கிலோ வெள்ளி பொருட்கள், 15 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் பழமையான நாணயங்களை மர்மநபர்கள் கொள்ளையர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து, புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மோப்ப நாயுடன் வந்து ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments