முதன்முறையாக மணப்பாறை நகரமன்றத் தலைவர் பதவியை கைப்பற்றிய அதிமுக.!

0 2556

திருச்சி மாவட்டம் மணப்பாறை, நகராட்சியாக மாறிய 56 ஆண்டுகால வரலாற்றில், முதன்முறையாக அந்நகராட்சியின் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியுள்ளது.

மொத்தமுள்ள 27 வார்டுகளில் திமுக 11 இடங்களிலும் அதிமுக 11 இடங்களிலும் சரிசமமாக வென்றன. எஞ்சிய 5 வார்டுகளில் வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர்களின் ஆதரவுடனே மணப்பாறை நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற வேண்டுமென்ற சூழலில்,  மறைமுகத் தேர்தல் நடைபெற்றது.

இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சுதா பாஸ்கரன் 15 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட கீதா மைக்கேல்ராஜ் 12 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

முதல் முறையாக மணப்பாறை நகராட்சி தலைவர் பதவி அதிமுக வசம் வந்திருப்பதால், அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments