ஆக்சன் அவதாரமாக அண்ணாச்சியின் லெஜண்ட் பர்ஸ்ட் லுக்..! வந்துட்டோம்னு சொல்லு..!

0 7563

சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் நடிப்பில் தயாராகி வரும் லெஜண்ட் படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது.

நடிகைகள் தமன்னா, ஹன்சிகா ஆகியோருடன் விளம்பரப் படத்தில் நடித்து புகழ் பெற்றதால், கோடிகளைக் கொட்டி தமிழ் சினிமாவுக்குள் சைனிங் ஸ்டாராக அடியெடுத்து வைத்தவர் சரவணாஸ்டோர் உரிமையாளர் சரவணன்...!

இந்த விளம்பரப் படத்தை இயக்கிய இரட்டை இயக்குனர்களான ஜேடி ஜெர்ரி ஆகியோரது இயக்கத்தில் சரவணா ஸ்டோர் புரொடக்சன் மூலம் பிரமாண்ட பொருட்செலவில் சரவணன் தயாரித்து நாயகனாக நடித்து வந்த படத்திற்கு தி லெஜண்ட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அந்த படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது

இன்றைய இளம் தலைமுறை நாயகர்களுக்கு சவால் விடும் வகையில் சரவணனின் லெஜண்ட் முதல் பார்வையில் கையில் குடை ஒன்றை வைத்துக் கொண்டு ஆக்சன் அவதாரம் எடுத்துள்ளார் சரவணன்.

யாரோ ஒருவர் முதலீடு செய்யும் பணத்தில் ரசிகர்களிடம், தங்களை ஆக் ஷன் ஹீரோக்களாக காட்டிக் கொள்வோர் மத்தியில் தான் உழைத்து சம்பாதித்த பணத்தில் தானே ஆக் ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள சரவணனின் தி லெஜண்ட் படம் கோடை கொண்டாட்டமாக திரைக்கு வர உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments