உக்ரைன் போரின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் சரிவு
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்தது.
இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் இருந்தே பங்குச்சந்தைகளில் சரிவு ஏற்பட்டது. முற்பகல் பத்தரை மணியளவில் மும்பை பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 1051 புள்ளிகள் சரிந்து 54 ஆயிரத்து 52 ஆக இருந்தது.
தேசியப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு நிப்டி 304 புள்ளிகள் சரிந்து 16 ஆயிரத்து 194ஆக இருந்தது. மோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் பங்கு மதிப்பு 5 விழுக்காடு வரை சரிந்தது.
Comments