சென்னை மாநகராட்சி மேயராக பிரியா பதவியேற்பு

0 8051

சென்னை மாநகராட்சியின் 49ஆவது மேயராக திமுகவைச் சேர்ந்த பிரியா பதவியேற்றுக் கொண்டார்.

சென்னை மாநகராட்சியின் 74ஆவது வார்டு மாமன்ற உறுப்பினராக திமுக சார்பில் வெற்றிபெற்ற பிரியா மேயர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

மேயர் பதவிக்கான தேர்தல் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதிமுக உறுப்பினர்களைத் தவிரப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அப்போது மேயர் பதவிக்குப் பிரியா மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்ததால் அவர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக மாநகராட்சி ஆணையரும் தேர்தல் அதிகாரியுமான ககன்தீப் சிங் பேடி அறிவித்தார்.

இதையடுத்துப் பிரியா பதவியேற்புக்கான உறுதிமொழியைப் படித்தார்.மேயருக்கான ஆசனத்தில் பிரியாவை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அமர வைத்தார்.

இதையடுத்து மேயருக்கான அங்கியும், 105 பவுன் தங்கச் சங்கிலியும் அவருக்கு அணிவிக்கப்பட்டன. அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் மேயருக்கான செங்கோலைப் பிரியாவிடம் வழங்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments