இந்தியாவின் நடுநிலை குறித்து செனட் சபை அதிருப்தி: ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாடு எடுக்கும்படி அமெரிக்கா இந்தியாவுக்கு கோரிக்கை

0 5836

ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாடு எடுக்கும்படி இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.ஐநா.சபையில் மூன்று முறை ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பு நடந்த போது இந்தியா தீர்மானத்துக்கு ஆதரவளிக்கவில்லை.

இது அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மீது பொருளாதாரத் தடையை அறிவிக்கவும் ஜோ பைடன் அரசுக்கு நெருக்குதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஷ்யப் படையெடுப்புக்கு எதிராக தெளிவான முடிவு எடுக்கும்படி அமெரிக்கா இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

இந்தியா தனது எல்லைகளில் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் தொடர்ந்து முரண்பாட்டை வலுத்து வரும் நிலையையும் சுட்டிக் காட்டிய அமெரிக்கா, அண்டை நாடுகளுடன் பிரச்சினை நீடித்த போதும் உள்நாட்டில் பிரதமர் மோடி சக்தி வாய்ந்த தலைவராக விளங்குவதாகவும் கருத்து தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments