உக்ரைனில் உள்ள அணுமின் நிலையத்தின் மீது ரஷ்யா தாக்குதல்

0 1990

ஐரோப்பியாவின் மிகப் பெரிய அணு உலையான உக்ரைனின் சபோரிசியா அணு மின் நிலையத்தின் அனைத்து பக்கங்களில் இருந்தும் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தியதால் அணுமின்நிலையம் தீப்பிடித்து எரிகிறது. அணு உலை வெடித்தால் செர்னோபிலை விட பத்து மடங்கு சேதங்களை விளைவிக்கும் என உக்ரைன் அமைச்சர் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கை 9-வது நாளை எட்டிய நிலையில் அனைத்து பக்கங்களில் இருந்து ரஷ்யப் படைகள் மும்முனைத் தாக்குதல் நடத்து வருகின்றன. பெலாரசில் நடந்த உக்ரைன், ரஷ்யா இடையிலான பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படாததை அடுத்து தீவிர தாக்குதலில் ரஷ்யப் படைகள் ஈடுபட்டுள்ளன. ஏற்கனவே கெர்சன், செர்னோபில் உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்தது.

கீவ்வின் அண்டை நகரமான சபோரிசியா அணு மின் நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தியாதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஐரோப்பியாவின் மிகப் பெரிய அணுமின் நிலையமான சபோரிசியா அணு உலை தீப்பிடித்து எரிகிறது. ஒருவேளை அணுஉலை வெடித்தால், செர்னோபில் அணு உலையில் ஏற்பட்டதைவிட பத்து மடங்கு அதிக சேதத்தை விளைவிக்கும் என உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒடேஷா, பிலா செர்கவா, வாலின் ஒபிலஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் ரஷ்ய விமானங்கள் தொடர் தாக்குதல் நட்த்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து வான்வெளித் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே சபோரிசியா அணு உலையின் நிலை குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம், அமெரிக்க அதிபர் பைடன் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments