தொழிற்கல்வி பாடத்தில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவது கட்டாயமல்ல ; பள்ளிக்கல்வித்துறை
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தொழிற்கல்வி பாடத்தில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவது கட்டாயமல்ல என பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.
நேற்று வெளியான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையில் புதிதாக தொழிற்கல்வி பாடம் சேர்க்கப்பட்டு, அந்த பாடத்திற்கு மே 21-ந் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
மாணவர்களின் திறனை மேம்படுத்தவே பொதுத்தேர்வு அட்டவணையில் தொழிற்கல்வி பாடம் சேர்க்கப்பட்டுள்ளது எனவும், அந்த பாடத்தில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது, அதில் கட்டாயம் தேர்ச்சி பெறுவது அவசியமல்ல எனவும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
Comments