சாலையில் நின்றிருந்த பாகன் மீது இருசக்கர வாகனம் மோதியதில் பயந்து ஓடிய யானையின் வைரல் வீடியோ

0 1879

கேரள மாநிலம் கொச்சியில் சாலையில் நின்றுக் கொண்டிருந்த யானைப்பாகன் மீது இருசக்கர வாகனம் மோதியதைக் கண்டு, யானை அலறியடித்து பயந்து ஓடிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.

மகாதேவர் கோவிலில் சிவராத்திரி பூஜைக்காக வந்திறங்கிய யானை, சாலையில் நின்றுக் கொண்டிருந்தது. அச்சமயம் இருசக்கர வாகனத்தில் குழந்தையுடன் வந்த பெண் ஒருவர், கட்டுப்பாட்டை இழந்து திடீரென அங்கு நின்றுக் கொண்டிருந்த யானைப்பாகன் மீது மோதினார்.

இதில், யானைப்பாகன் சிறிது தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டதை கண்டு மிரண்ட அந்த யானை, மற்றொரு யானைப்பாகன் அதன் மீது அமர்ந்திருக்கும் போதே அங்கிருந்து தெறித்து ஓடியது.


இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த பெண் உட்பட குழந்தை மற்றும் யானைப்பாகன் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments