17 இலட்சம் ஸ்மார்ட்வாட்ச்களைத் திரும்பப் பெறும் பிட்பிட் நிறுவனம்
பிட்பிட் நிறுவனம் அதன் ஸ்மார்ட்வாட்ச்களில் பேட்டரி சூடாகி வெடித்துத் தீப்பற்ற வாய்ப்புள்ளதாகக் கூறி 17 இலட்சம் ஸ்மார்ட்வாட்ச்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
நடந்த தொலைவு, எடுத்து வைத்த அடிகள், உடல் வெப்பநிலை, நாடித்துடிப்பு உள்ளிட்ட பல்வேறு விவரங்களைக் காட்டும் சிறப்பு பிட்பிட் ஸ்மார்ட்வாட்ச்களில் உள்ளது.
அமெரிக்காவில் 10 இலட்சம் வாட்ச்களும், பிற நாடுகளில் 7 இலட்சம் வாட்ச்களும் விற்பனையாகியுள்ள நிலையில், இதன் பேட்டரி சூடாகி வெடித்துத் தீப்பற்றிய நிகழ்வுகள் அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் நிகழ்ந்துள்ளது குறித்து அமெரிக்காவின் நுகர்பொருள் பாதுகாப்பு ஆணையத்துக்குப் புகார்கள் வந்தன.
இதன் அடிப்படையில் 17 இலட்சம் ஸ்மார்ட்17 இலட்சம் ஸ்மார்ட்வாட்ச்களைத் திரும்பப் பெறும் பிட்பிட்வாட்ச்களைத் திரும்பப் பெறுவதாக பிட்பிட் நிறுவனம் அறிவித்துள்ளது.
Comments