குவாட் அமைப்பின் தலைவர்கள் காணொலி மூலம் ஆலோசனை

0 1708
குவாட் அமைப்பின் தலைவர்கள் காணொலி மூலம் ஆலோசனை

குவாட் அமைப்பு நாடுகளின் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து குவாட் அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்நிலையில் காணொலி வாயிலாக இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட 4 நாடுகளின் தலைவர்களும் இணைந்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

உக்ரைன் விவகாரத்தை மையமாக வைத்தே இவர்களது உரையாடல் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குவாட் கூட்டணியில் உள்ள நாடுகளில் இந்தியா மட்டுமே உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரில் நடுநிலை வகித்து வரும் சூழலில் நடைபெற உள்ள இந்த ஆலோசனைக்கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments