காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நாளை முதல் மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர், வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தமிழகம் நோக்கி நகரக்கூடும் என்றார்.
இதன் காரணமாக 4,5 ஆகிய இரு நாட்களுக்கு டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றார்.
சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.
Comments