டாஸ்மாக் கடைகள் திறப்பை மக்கள் நினைத்தால் தடுக்கலாம் - தமிழ்நாடு அரசு

0 3104

தமிழகத்தில் புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை தடுக்க மக்களுக்கு அதிகாரம் அளித்து சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மக்கள் அதிகம் கூடும் இடங்கள், கோவில்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகே மதுபான கடைகள் திறக்கப்படுவதை கண்டித்து மக்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இனிமேல் புதிய டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை தடுக்க மக்களுக்கு அதிகாரம் அளித்து சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி,  டாஸ்மாக் கடைகளுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அது குறித்து கண்டிப்பாக பரிசீலிக்க வேண்டும் எனவும், மக்கள் தெரிவிக்கக்கூடிய ஆட்சேபங்களை பரிசீலித்து தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்காமல், எந்த டாஸ்மாக் கடைகளையும் திறக்க அனுமதிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் எதிர்ப்பை மீறி கடைகளை திறக்க அனுமதித்தால் 30 நாட்களுக்குள் ஆட்சியரின் முடிவை எதிர்த்து மதுவிலக்கு ஆயர்த்தீர்வை ஆணையருக்கு மேல் முறையீடு செய்யவும் சட்ட விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments