பெட்ரோல் நிலையம், சார்ஜிங் நிலையம் அமைப்பது தொடர்பான விதிமுறைகள் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு
மாநில மற்றும் மாவட்ட நெடுஞ்சாலை, முக்கிய மற்ற்ம் இதர சாலைகளில் பெட்ரோல் விற்பனை நிலையம், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையம் அமைப்பதற்கான இடைவெளி மற்றும் தடையில்லா சான்று பெறுவது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், கிராமப்புற மாநிலச் சாலைகளில் 300 மீட்டர் இடைவெளியிலும், சுங்கச்சாவடி, ரயில்வே லெவல் கிராசிங் உள்ளிட்ட பகுதிகளில் 500 மீட்டர் இடைவெளியிலும், 2 பெட்ரோலிய விற்பனை நிலையங்களுக்கு இடையில் கிராமம், நகரம், மலைப்பகுதி மாநில நெடுஞ்சாலையில் 300 மீட்டர் இடைவெளி உள்ளிட்ட பகுதிகளில் எரிபொருள் விற்பனை நிலையம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments