உக்ரைனில் ரஷ்ய இராணுவத்தின் தாக்குதலில் 15 குழந்தைகள் உட்பட 230 பேர் உயிரிழப்பு..!

0 3507

உக்ரைனில் ரஷ்ய இராணுவத்தின் தாக்குதலில் இதுவரை 15 குழந்தைகள் உட்பட 230 பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், உண்மையான இறப்புகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்று ஐ. நா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கனரக பீரங்கி தாக்குதல்கள், வான்வழித் தாக்குதல்கள் மற்றும் வெடிபொருட்கள் ஆகியவற்றின் விளைவாக பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறியுள்ளது.

மேலும், ரஷ்யா இராணுவத்தினரின் தாக்குதலில் உக்ரைனில் இதுவரை 752 பேர் உயிரிழந்துள்ளதாக கூறியது. இதில், 227 பேர் கொல்லப்பட்டதாகவும், 525 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments