போரை நியாயப்படுத்த அதிபர் புதின் பொய் பிரசாரம் - பிரான்ஸ் அதிபர்
உக்ரைன் மீதான போரை நியாயப்படுத்த அதிபர் புதின் பொய் பிரசாரம் செய்வதாகவும், இருப்பினும் போரை நிறுத்தக் கோரி புதினை தொடர்ந்து வலியுறுத்த உள்ளதாகவும் பிரஞ்சு அதிபர் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் புதின் போரை தேர்வு செய்திருப்பது சர்வதேச அளவில் அவரது அர்ப்பணிப்புகள் எந்த அளவில் இருக்கிறது என காட்டிக் கொடுப்பதாக மேக்ரான் தெரிவித்தார்.
இந்த போர் ரஷ்யாவுக்கும், மேற்கு நாடுகளுக்கும் இடையிலானது இல்லை என்றும், ரஷ்யா ஒரு ஆக்கிரமிப்பாளர் என்றும் மேக்ரான் தெரிவித்தார்.
Comments