ருமேனியாவில் காணாமல் போன விமானத்தை தேடிச் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - 7 வீரர்கள் உயிரிழப்பு

0 1924

ருமேனியாவில் காணாமல் போன விமானத்தை தேடிச் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 7 வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பயணத்தின் போது காணாமல் போன MiG 21 Lancer விமானம் மற்றும் விமானியை தேடி 7 வீரர்களுடன் சென்ற IAR 330பியுமா வகை ராணுவ ஹெலிகாப்டர், கருங்கடல் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமான நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து விசாரித்து வருவதகாகவும் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments