ரஷ்யா மீதான உலக நாடுகளின் பொருளாதார தடைகள் எதிரொலி... 8 ஆண்டுகளில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை உயர்வு
ரஷ்யாவின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளின் எதிரொலியாக 8 ஆண்டுகளில் இல்லாத அளவாக ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 111 டாலரை தாண்டி உச்சம் தொட்டது.
உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை கண்டித்து ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் விதித்த பொருளாதார தடைகளால் கச்சா எண்ணெய் சப்ளை தடைபட்டுள்ளது. கடந்து இரண்டு நாட்களில் மட்டும் கச்சா எண்ணெயின் விலை 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 113 டாலர் வரை சென்ற நிலையில் இறுதியில் 111 அமெரிக்க டாலரில் முடிவு பெற்றது. கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு மாற்று ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்த போதிலும், ஐரோப்பிய நாடுகள் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு எற்படத் துவங்கி உள்ளது.
Comments