உக்ரைனில் இருந்து இதுவரை 17,000 பேர் இந்தியர்கள் மீட்பு..!

0 2478
உக்ரைனில் இருந்து இதுவரை இந்தியர்கள் 17,000 பேர் வெளியேறி இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

உக்ரைனில் இருந்து இதுவரை இந்தியர்கள் 17,000 பேர் வெளியேறி இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

இந்திய தூதரகம் விடுத்துள்ள அறிவுறுத்தலை அடுத்து, உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேறுவது அதிகரித்துள்ளதாக
வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்தார்.

கீவ் நகரில் இருந்த தூதரகத்தில் இருந்து அதிகாரிகள் அனைவரும் வெளியேறிய நிலையில், உக்ரைன் நாட்டின் லீவிவ் நகரில் இந்திய தூதரகத்தின் தற்காலிக அலுவலகம் அமைக்கப்படுமென அவர் அறிவித்தார்.

இதனிடையே உக்ரைனில் இருந்து போலந்து நாட்டின் எல்லை நகருக்கு வந்துள்ள இந்திய மாணவர்கள் 600 பேருடன் மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் கலந்துரையாடினார். உக்ரைனில் மருத்துவ மாணவர்களின் படிப்பு தொடர இந்திய அரசு நடவடிக்கை எடுக்குமென மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் உறுதி அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments