கீவ் நகரை கைபற்றுவதில் ரஷ்யாவுக்கு தொய்வு - அமெரிக்க மூத்த ராணுவ அதிகாரி கருத்து
உக்ரைனின் கீவ் நகரை கைபற்றுவதில் ரஷ்யாவுக்கு ஏற்பட்ட தொய்வு, ராணுவ தளவாடங்களை கொண்டுச் செல்வதில் ஏற்பட்ட சிக்கல், உணவு, எரிபொருள் பற்றாக்குறை, வீரர்களிடையே மன உறுதி குறைந்தது உள்ளிட்டவை காரணமாக அமைந்திருக்கலாம் என அமெரிக்காவின் மூத்த ராணுவ அதிகாரி கருத்து தெரிவித்துள்ளார்.
வடக்கு கீவ்-ன் புறநகர் பகுதியில் 64 கிலோ மீட்டர் நீளத்திற்கு ராணுவ தளவாடங்களுடன் கீவை நோக்கி ரஷ்ய ராணுவம் நகர்ந்து வருவதாக கூறப்பட்ட நிலையில், எதிர்பாராத சவால்களால் ரஷ்ய துருப்புகள் , போர் திட்டங்களை மாற்றியதாக அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், போரில் சில ரஷ்ய வீரர்கள் சண்டையிடாமல் சரணடைந்தது, சில ராணுவ வாகனங்களை சாலை ஓரங்களில் அப்படியே விட்டுவிட்டு சென்றது உள்ளிட்ட சம்பவங்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments