உக்ரைனில் சிக்கி அகதிகளுடன் அகதிகளாக பல மைல் தூரம் நடந்தே சென்று போலந்தில் தஞ்சமடைந்த ஹாலிவுட் நடிகர் ஷான் பென்

0 5406

உக்ரைனில் சிக்கி கொண்ட ஹாலிவுட் நடிகர் ஷான் பென், அகதிகளுடன் அகதிகளாக பல மைல் தூரம் நடந்து போலந்தில் தஞ்சமடைந்துள்ளார்.

61 வயதாகும் ஷான் பென், உக்ரைன்-ரஷ்யா விவகாரம் தொடர்பான ஆவனபடத்தின் படப்பிடிப்பிற்காக தலைநகர் கீவ்-வில் தங்கியிருந்தார். கீவ் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியதால், ஆயிரக்கணக்கான உக்ரேனியர்கள் உடைமைகளை கூட எடுக்காமல் போலந்து நோக்கி கார்களில் சென்றனர்.

இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் சாலைகளில் நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்பட்டது. தன் நண்பர் ஒருவருடன் காரில் போலந்து நோக்கி சென்ற நடிகர் ஷான் பென், மேலும் காலம் தாழ்த்த விரும்பாமல், காரை சாலையோரம் நிறுத்திவிட்டு, நீண்ட தூரம் நடந்தே போலந்து வந்தடைந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments