வெளிநாடு செல்லும் ரஷ்யர்கள் 10,000 அமெரிக்க டாலர்களுக்கு மேல் எடுத்து செல்லகூடாது - அதிபர் புடின் உத்தரவு
வெளிநாடு செல்லும் ரஷ்யர்கள் 10,000 அமெரிக்க டாலர்களுக்கு மேல் எடுத்து செல்லகூடாது என அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
உக்ரைன் படையெடுப்பை கண்டித்து ரஷ்ய வங்கிகள் உடனான பணப்பரிவர்த்தனைகளுக்கும், ரஷ்ய பொருட்களுக்கும் பல்வேறு நாடுகள் தடை விதித்ததால், ரஷ்ய ரபிளின் பணமதிப்பு கடுமையாக சரிந்துள்ளது.
பல்வேறு நாடுகள் ரஷ்யாவிற்கு மின்னணு சாதனங்களை ஏற்றுமதி செய்ய தடை விதித்ததால் ரஷ்யாவில் அவற்றின் விலை பன்மடங்கு அதிகரித்து வருகிறது.
வரும் நாட்களில் செல்போன் வாங்குவது கூட முடியாத காரியமாகி விடும் என்பதால் ஏராளமானோர் தற்போதே செல்போன் வாங்கி வருகின்றனர்.
அரசு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடும் என்ற அச்சத்தில் ஏராளமானோர் ஏடிஎம்-களில் இருந்து சேமிப்பு பணம் முழுவதையும் எடுத்து வருகின்றனர்.
Comments