உக்ரைனியர்களை தனது உணவகத்தில் தங்க வைத்து இலவசமாக உணவு, உறைவிடம் வழங்கிய இந்தியருக்கு குவியும் பாராட்டு
ரஷ்ய தாக்குதலில் இருந்து தப்பிக்க உக்ரைனியர்கள் சிலர் இந்தியர் ஒருவருக்கு சொந்தமான உணவகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
குஜராத்தை சேர்ந்த மனிஷ் டேவ், தலைநகர் கீவில் தங்கி படிக்கும் இந்திய மாணவர்களுக்காக ஒரு கட்டிடத்தின் அடித்தளத்தில் உணவகம் ஒன்றை தொடங்கினார்.
தற்போது ரஷ்யா-உக்ரைன் இடையே போர் மூண்டதால் ரஷ்ய தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள மக்கள் பாதாள அறைகளில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
பாதாள அறை வசதி இல்லாதவர்கள் தனது உணவகத்தில் வந்து தங்கி கொள்ளுமாறு மனிஷ் டேவ் அறிவித்தார். உக்ரைனியர்கள், இந்தியர்கள் என பாகுபாடின்றி பலர் அங்கு வந்து தஞ்சமடைந்தனர்.
ஆபத்து காலத்தில் தங்க இடம் அளித்தது மட்டுமல்லாமல் அவர்களுக்கு இலவசமாக உணவும் அளித்து வரும் மனிஷ் டேவை மக்கள் மனதார பாராட்டினர்.
Comments