மற்ற நாடுகளிடம் இருந்து உக்ரைன் அணு ஆயுதங்கள் பெற அனுமதிக்க மாட்டோம் - ரஷ்யா கடும் எதிர்ப்பு
ரஷ்யா - உக்ரைன் இடையிலாக 7-வது நாளாக தொடருவதற்கு மத்தியில் மற்ற நாடுகளிடம் இருந்து உக்ரைன் அணு ஆயுதங்கள் வாங்குவதற்கு அனுமதிக்க மாட்டோம் என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லவ்ரோவ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தலைநகர் கீவ் உட்பட முக்கிய நகர்களை சுற்றி வளைத்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வரும் சூழலில், உக்ரைன் தக்க பதிலடி கொடுத்து வருவதாக அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு பேரழிவு ஏற்பட நேரிடும் எனவும், உக்ரைன் மற்ற நாடுகளிடம் இருந்து அணு ஆயுதங்கள் வாங்குவதை தங்கள் நாடு அனுமதிக்காது எனவும் செர்ஜி லவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
Comments