வேளாண் துறைக்கு ஆண்டுக்கு 70ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் - நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிட்ட பாமக
பாட்டாளி மக்கள் கட்சியின் 15ஆவது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார்.
வேளாண் விளை பொருட்கள் கொள்முதல் கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும் என்பதை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டிருந்த அந்த நிழல் நிதி நிலை அறிக்கையில், இளைஞர்களுக்கு 50லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, வேளாண் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம், வேளாண் துறைக்கு தனியாக மூன்று அமைச்சகங்கள் உருவாக்குவது, வேளாண் துறைக்கு ஆண்டுக்கு 70ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும், பேருந்துகளில் வேளாண் விளைபொருட்களை கொண்டு செல்ல இலவசம், புதிதாக 3 வேளாண் புதிய பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.
மேலும், நீர் வளத்தை பாதுகாக்கும் வகையில் அனைத்து மணல் குவாரிகளும் மூடப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Comments