போர் எதிரொலி - சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரிப்பு
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் எதிரொலியால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து 112 டாலராக உயர்ந்துள்ளது.
உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்யா மீது உலக நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இதனால், கச்சா எண்ணெய் உற்பத்தியில் உலகில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ரஷ்யாவில் இருந்து வர கூடிய பெரும் அளவிலான கச்சா எண்ணெய் முடங்கி உள்ளது.
இதனால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு அதன் விலையும் உயர்ந்துள்ளது. இதனிடையே, நாடு முழுவதும் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையும் 106 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Comments