இந்தியாவுக்கு எஸ்400 ஏவுகணை வழங்க எந்தத் தடையும் இருக்காது -இந்தியாவுக்கான ரஷ்யத் தூதர்
இந்தியாவுக்கு எஸ் 400 ஏவுகணை அமைப்பை வழங்குவதில் எந்தத் தடையும் இருக்காது என இந்தியாவுக்கான ரஷ்யத் தூதர் டெனிஸ் அலிப்போவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணை அமைப்பை வாங்க இந்தியா உடன்பாடு செய்துள்ளது. இதனிடையே உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் அதன் மீது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் பொருளாதாரத் தடை விதித்துள்ளன.
இதனால் குறித்த காலத்தில் இந்தியாவுக்கு ஏவுகணை அமைப்பு வழங்கப்படுமா என்கிற வினாவுக்கு ரஷ்யத் தூதர் டெனிஸ் அலிப்போவ் பதிலளித்தார்.
இந்தியாவுக்கு வழங்க ஒப்புக்கொண்ட ஏவுகணை அமைப்பை வழங்குவதில் எந்தத் தடையும் இல்லை என்றும், எந்த வகையான பொருளாதாரத் தடையும் இதனைப் பாதிக்காது என்றும் குறிப்பிட்டார். உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு நன்றி தெரிவித்தார்.
கார்க்கிவிலும் கிழக்கு உக்ரைன் பகுதிகளிலும் சிக்கியுள்ள இந்தியர்களை ரஷ்யா வழியாக வெளியேற்ற உதவும்படி இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் டெனிஸ் அலிப்போவ் தெரிவித்தார்.
Comments