பொருளாதாரத் தடையால் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வெளியேறும் ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்பெர்பேங்க்...
ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்பெர்பேங்க் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வெளியேறுகிறது.
ரஷ்யாவின் மிகப்பெரும் வங்கியான ஸ்பெர்பேங்க் முன்னாளைய சோவியத் ஒன்றியத்தின் குடியரசுகளிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் ஏராளமான கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வந்தது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை அடுத்து ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய வங்கிகள் மீது பொருளாதாரத் தடை விதித்தன. இதனால் ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஸ்பெர்வங்கிக் கிளைகளில் கணக்கு வைத்திருந்தோர் அச்சத்தின் காரணமாக ஒரே நேரத்தில் தங்கள் பணத்தை எடுத்தனர்.
வைப்புத்தொகை முழுவதும் எடுக்கப்பட்டதால் தொடர்ந்து வங்கித் தொழிலை நடத்த முடியாத நிலை ஸ்பெர்வங்கிக்கு உருவானது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் வங்கித் தொழிலில் இருந்து வெளியேறுவதாக ஸ்பெர்பேங்க் அறிவித்துள்ளது.
Comments